வியாழன் கவிதை

வைகாசி முதல் தினம் ————————

கவிதை நேரம்-02.05.2024
கவி இலக்கம்-1866
வைகாசி முதல் தினம்
————————
மே தினம் உலகமளவில் விடுதலை தினம்
கஸ்டப்பட்டு உழைக்கும் உழைப்பதிகம்
உற்சாகம் கொடுத்து உரிமை பெற்றது
ஐ.நாடு சபையால் தெரிவான தினம்
அதி நேர வேலைகளுக்கு அடிமையானது
தொழிலாளியை முதலாளி சுரண்டயது
உரிமை போராட்டத்தில் போராடி
ஒளித்திட்ட மக்களின் போராட்ட தினம்
எட்டு மணித்தியாலம் நடைமுறையில்
கட்டாயமாக்கப் பட்ட பெயரான தினம்
உழவர் தம் கடும் உழைப்பானது
வயிற்று பசி போக்க அயராது உழைப்பில்
சகல துன்பங்கள அனுபவித்த நாட்கள்
தேவைகள் கவனித்து மகிழும் ஓய்வு தினம்
உலகெங்கும் தொழிலாளர் ஓய்ந்திருக்க
நலம் காக்க உதவிடும் பொதுப் பணியில்
மருத்துவ பொதுப் பணிகளின் மேன்மை தினம்
இரவு பகலாய் ஊழியம் செய்வோர் உழைப்பாளி
உழைப்பவனே பலசாலி உலகத்தின் படைப்பாளி