வியாழன் கவிதை

வியாழன் கவிதை நேரம்-30.05.2024 கவி இலக்கம்-1882 விஞ்ஞானம் ————— விந்தை மிகு உலக

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-30.05.2024
கவி இலக்கம்-1882
விஞ்ஞானம்
—————
விந்தை மிகு உலகினிலே
வீராப்பாய் நாம் உயர்ந்திட
பகுத்தறிவினை பக்குவமாய் வளர்த்திட
விஞ்ஞான அறிவே இரு கண்மணிகளாகும்
விஞ்ஞானத்தை மனிதன் அதிகம் நேசிக்கிறான்
இயற்கையோடு சேர்ந்து பயணிக்கிறான்
தேடல் என்ற உணர்வினால் அலைகிறான்
தினமும் தேடலாக்கிய விஞ்ஞானம்
இன்று கனவாகி போய் விடுகின்றது
எண்ணில்லாத இயற்கை அழிவுகள்
கண்டு பிடிப்புக்கள் கலந்திட்ட உலகில்
காலத்தை சுருக்கி கடிதென இயங்கிலும்
உயிர்கொல்லி நோய்க்கு தீர்வு இல்லையே
மக்களிடையே ஏக்கம் பயம் அமைதியின்மை கூடவே
தொண்டுகள் மூலம் பலதுமாக செய்தும்
ஆய்வில் மருத்துவர்களும் தொடரும் ஆராய்ச்சியில்
விஞ்ஞானம் தோற்ற நிலையில் கேள்விக்குறியாகுதே