விட்டில் பூச்சிகளாய்
விளையாடித் திரிந்தது
வானிலே சிறகடித்து
பறந்து. திரிந்தது
எண்ணப் பறவைகளாய்
எதிலுமே பயமின்றி
வலம் வந்தது
கன்னிப் பருவத்திலே
கனவுகளில் மிதந்தது
கல்வியிலே சிறப்பு
பெற்று இருந்தது
இல்லறத்தில் இணைந்தது
இல்லற வாழ்க்கை
மகிழ்வில் சென்றது
பிள்ளை பேரப்பிள்ளை
கண்ட மகிழ்வில்
இருக்க காலம்
செய்த கொலம்
வாழ்வில் ஒருநாள்
விடியாத இரவொன்று
கனவிலும் நினையாத
விடியாத இரவொன்று
என் வாழ்விலே!