விடியாத இரவொன்றில்
துயிலாத கண்ணிரண்டு
இமை மூட மறுத்து
துடிக்கிது தவித்த படி
மனக் கிடங்கில்
புதைந்து கிடக்கும்
எண்ணங்கள் ஏராளமாய்
மீட்டிப் பார்க்குது விழி நீர் வடிய
பச்சை மரத்துக்குப் பால் வார்க்க
உழைத்துக் காய்ந்த கரங்கள்
குடும்ப பாரம் தாங்கிச் சோர்ந்த
கூனிப் போன முதுகு
யாருமற்ற அநாதையாக
கை விடப் பட்ட கையறு நிலை
தனிமையில் தவிக்குது
பட்ட மரமாய் இன்று
நீடிக்க வேண்டாமே இந்த அவல நிலை
விடியாத இரவுகளை விடிய வைப்போம்
வளமான வாழ்வளித்து
எம் முதியோரை ஆதரிப்போம் .
நன்றி வணக்கம்