பேரானந்தம்..!
பெற்ற பிள்ளை
கைகளிலே
இருக்கும் போது
ஆனந்தம்.
அவன் ஆண் பிள்ளை
எனும் போது
வீடு முழுதும்
கொண்டாட்டம்.
அப்பா என்று
சொல்லும் வார்த்தை
அவன் நாவில் வரும்
முதல் வார்த்தை.
இந்த தருணம்
வரும் வரையோ
தவம் இருந்து
பெற்றெடுத்தீர்.
– விஜயகுமார் ஜதுர்ஷிகா
முல்லைத்தீவு.