வியாழன் கவிதை

விக்னேஷ்வரன் அர்ச்சனா.

என்னுள் உன் காதல்

பொழுது சாயும்
பொழுதில்
கிணற்றோரம் ஒர்
உருவம்.

சற்று விரைந்து
சென்று
பார்த்த போது
மன ஏக்கம் என்னில்.

நீரில் நெளிந்து
செல்வது போன்ற
வட்ட நிலவும் போல
உனது முகம்.

வியந்து பின்சடை
பார்க்கின்றேன்.

காற்றில் ஆடும்
மரங்களுக்கு நடுவில்
தெரியும் நிலவு.
அதனுள் பாட்டி.

கதிரவன் மறைந்து
நடுநிசி வேளையில்
உன் நினைவு
என்னை கொல்லுதே!

குளிர் நீரை உடலில்
ஊற்றும் போது
ஏற்படும் புல்லரிப்பை போன்று

உனது நினைவும் என்னுள்
குளிர் நீரை ஊற்றுகின்றதடா
என் காதலா!

வரி : விக்னேஷ்வரன் அர்ச்சனா.