வியாழன் கவிதை

விக்கினேஸ்வரன். அர்ச்சனா.

எதிர்கால தலைமுறை
உமக்காக…
************
தாமரை இலை
நீர் போல்
உருண்டு திரிவது தான்
இவ் மாணவப் பருவம்.

நீர் தவறி குளத்தில்
விழுவதா?….. இல்லை.
இலையில் இருப்பதா என
சிந்திக்க வைக்கும்
பருவம் அது.

உமக்கான முடிவை
நீர் தான் எடுக்கலாம்.

ஆசானுடைய அறிவுரையில்
செல்ல வேண்டுமே தவிர;
முடிவை நீர் தான்
எடுக்க வேண்டும்.

யாரோ ஒருவருடைய
கட்டாயத்தில்
இயங்குவீராயின்
நீர் தழும்பிக் கொண்டே
தான் இருப்பீர்.

சிறுவர்களே உமக்கான
அத்திவாரத்தை
சரியாக போடுங்கள்.

கட்டுகள் வரிசையாக
வரும்.

நீர் நடந்துவரும்
பாதையில்
அணைகள் காணப்படும்.

தவறி விழுந்தால்
உமது
எதிர்காலம் இடம்மாறிவிடும்.

தாமரை இலையில்
நீர் இருக்குமானால்
எதிர்காலம்
உமக்கானதாக தித்திக்கும்.
——————-
வரிகள் விக்கினேஸ்வரன். அர்ச்சனா.
உடுப்புக்குளம்.முல்லைத்தீவு.

அறிமுகம் Jeya nadesan aunti.