வியாழன் கவிதை

வலியதோ முதுமை

Selvi Nithianandan (608) 28.03.2024
வலியதோ முதுமை
காலமும் வேகமாய் நகர
ஞாலமும் மாற்றமாய் சேர
சோகங்கள் பலதாய் தொடர
சோர்ந்திடும் சரீரம் உணர

வெளியிலே நடையும் இன்றி
வெயிலும் வரவும் குன்றி
வீட்டிலே சோர்வாய் தூக்கம்
விடிந்தால் எழுவதால் ஏக்கம்

மூட்டு முதுகு வலியாய்
காலும் வீக்கம் நோவாய்
படுக்கை இல்லா விழிப்பாய்
பயமும் துரத்த நினைப்பாய்

மூப்பு இன்றும் நிலையாம்
முனகும் செயலில் தொல்லையாம்
தீர்ப்பு அதுவே இல்லையாம்
தீர்க்க முடிவே வலியாகுமா?