(தேவை)
புத்தகம் தேவை புதிய சிந்தனைக்கு
மொழி தேவை புரிதலுக்கு
கல்வி தேவை மனித வாழ்க்கைக்கு
அனுபவம் தேவை அறியாமையை விலக்க
அறிவு தேவை பலதை அறிவதற்கு
தன்னம்பிக்கை தேவை நினைத்தது நடக்க
ஆசான் தேவை அறிவை புகட்ட
அவமானம் தேவை அகிலத்தில் உனக்கோர் இடம் கிடைக்க
புதிர்களின் தேவை மூளைக்கு வேலை
சிந்தனைகள் தேவை சிகரம் தொட
அன்பு தேவை இங்கு அனைவருக்கும்
பிரச்சினைகள் தேவை பிழைகள் தவிர்க்க
நல்லுள்ளங்கள் தேவை நம்பிக்கை வைக்க
விடாமுயற்சி தேவை விரும்பியதை அடைய
கவிஞன் தேவை கவிதைகள் வடிக்க
தேவை ஒன்றே வாழ்வதற்கு தேவை
வன்னிக்கவி லக்சன்
(வசந்தன் லக்சன்)
இலங்கை.