*தமிழ் மொழி*
உணர்வில் கலந்த மொழி.
உலகில் நிலைத்த மொழி.
மொழிகளிற்கு தலையான மொழி.
தமிழனிற்கு தாயான மொழி.
சொல்,ஓசை நயம் கொள் மொழி.
வானாண்டவர் நாவின் சொல் மொழி.
இலக்கியங்களை மழையாய் பொழிந்த மொழி.
எப்போதும் என் மதியில் கலந்த மொழி.
தரணியெங்கும் பேசும் மொழி.
புவி முதலில் உணர்ந்த மொழி
என் நாவின் சுவை
மொழி
இன் பாரின் முதல் மொழி
தாயின் கருவறையில் கேட்ட முதல் மொழி
சேயாயிருக்கையில் வாயாற சொன்ன மொழி
வளர்ந்த போது நெஞ்சார சொன்ன மொழி
மாணவனாய் உள்ள போது கல்வி தந்த மொழி
கவிஞனாய் உள்ள போது வரிதந்த மொழி
என் தொப்பிள் கொடி உறவான ‘தமிழ் மொழி
-வன்னிக்கவி லக்சன்…
இலங்கை.