சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

நீரழிவு…..
வியாதியின் வேர்மூலம்
விக்கினத்தின் நீர்மூலம்
நீரழிவாய் பிரவாகம்
நிர்க்கதியாய் உடலாகும்
பலநோய்க்கு மூலதனம்
படர்ந்தெழுந்தே பாதிக்கும்
வருமுன் காப்புறுதி
வந்தபின் காத்தெழுந்து
உணவாலே கட்டமைத்தால்
உடலுறுதி கட்டமாகும்.
நீரழிவும் நிலைகுன்றும்
நிஜவாழ்வு நிதமாகும்.

நன்றி மிக்க நன்றி