ஒளியின்றி ஒளிர்வெங்கு…
வழி தொலைத்து விழி தொலைத்து
வறுமைநிலை சூழ்ந்திருக்கும்
வெறுமை வாழ்வில் ஒளியெங்கு!
வரட்சி நிலம் பாலைவனம்
வரண்ட அன்பில் ஏது இனம்
புரட்சி செய்த போர்ச்சூழல்
பூத்துநிலம் பசுமைபெற ஒளியெங்கு!
தாழ்வுநிலை மனிதநேயம்
தளர்ந்து போன வாழ்வின் உரம்
உதவும் நிலை உதாசீனம்
உறவுகளின் வேற்றுமையில் ஒளியெங்கு!
அறிவியலின் ஆட்சிநிலை
தொழில்நுட்ப வளர்ச்சிநிலை
தொடர்பாடல் குன்றும் வழி
தொலைந்து போகும் வேறுபாட்டில் ஒளியெங்கு!
ஒளிக்கோலம் வழிகாட்ட
வழித்தீபம் சுடரேற்ற
அரணாகும் அகிலத்தின்
ஒளியாலே ஒளியேற்று
உலகையே வசமாக்கு!
அகமெங்கும் ஒளியாகி
அகிலமே ஒளிர்வாகி
ஓங்குபுகழ் மண்வீரம்
ஒற்றுமையில் ஓர்தீபம்
ஏற்றுகிறோம் ஒளியாகி ஒளிர்வாகுமே!
நன்றி மிக்க நன்றி
நன்றி
மிக்க நன்றி