சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பெண்கள் புரட்சி..
யுகத்தின் மாற்றம்
அகத்தின் வெளிச்சம்
ஆற்றல்த் திறனில்
அணிசேர் பெண்கள்
போற்றும் வாழ்வே
புரட்சி மிடுக்கு

எதிலும் உச்சம்
இடரின் அச்சம்
தடைகள் தகர்த்தார்
தமிழீழம் மீட்க
தகர்ந்தே தணிந்தார்
தமிழீழப் பெண்கள்
விடுதலை வேட்கை
வீரத்தின் பதிவு
வெற்றியின் உயர்வு
எதிரியை எதிர்த்தே நிமிர்ந்தனர் பெண்கள்
ஈழத்தின் புரட்சி
இன்றைய நாளே
வீரத்தை விதையிட்ட வெற்றி மங்கைகள் போற்றுதல் வரமே!
நன்றி