தலைப்பு ..
வற்றாத வளமாய்
வானுயர்ந்த தருவாய்
தொட்டாலே துலங்கும்
தொன்மைகளும் உராயும்
செய்தியெனும் தேட்டம்
முன் தலைப்பே நாட்டம்
படித்திடவே தூண்டும்
பக்கங்கள் புரளும்
தனித்துவமே தலைப்பு
தக்க வைக்கும் சிறப்பு
கவிநயத்தின் பிழிவு
வாழ்த்துவகை விருது
வழங்கும் கொடை பெரிது
தாங்குவது தலைப்பு
தகமையறி முகப்பு
எதற்கும் இது ஈடே
எண்ணற்ற சுவடே
காக்கும் வரம் பெரிதே
தலைப்பு எனும் ஏட்டில்
விதைப்பிடுதல் விருத்தி
பதிவுகளின் கூட்டில்
பல எழுத்தின் சாரம்
பாரின் நிலை பொறிக்கும்
காப்பியம் காவியமாய்
கால வலு கடத்தும்!
நன்றி
மிக்க நன்றி