வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

ஐநூறின் அடிநாதம்…
ஆங்காங்கே நிகழ்வுகள் தொடரான வீரியம்
கவியோடும் இளையோர் இணைவோடும் ஒன்றித்த காரியம்
தொடராகி பாமுகத்தில் தொடர்ந்தே ஆர்வம்
தொகுப்பாளராக்கி தொன்மைக்கு மூலம்

கேள்விச்சரமென்ற நாமத்தின்
இணைப்பு
தேடலை பகிர்தலை அறிதலை
விளைவாக்கும் நிகழ்வு
தொடராக பலரிணைந்து பயணிக்கும் உறவு
இணைவாக்கும் கலையகத்து
பாரிய பொறுப்பு
தொழில்நுட்ப வளர்ச்சியின்
பங்காற்றல் படர்வு
தொடராகும் தொகுப்பின் தனியாற்றல் திறமை
தொந்தரவு இல்லாமல்
தொடர வைத்த குடும்பத்தார்
பாங்கு
இனிதாகி இன்றான ஐநூறின்
வெற்றி
இது போல இணைப்போடு தொடராகும் சக்தி
பல நூறாய் பெருகட்டும்
பாமுகத்துச் சக்தி
செவ்வாயின் சீராக்கும்
சிறந்த பணித் தொகுப்பில்
தன்நேரப் பணியோடு
தவறாது தொடரும்
வெகுமதிக்கு நிகரே வெற்றியின் வாகை
தவறாது வினாவிடைகள்
தாங்கி வரும் தொடரே
இதுபோல தொடர்வோர்கள் பாமுகத்தில் பலரே
ஒன்றிணைத்து ஓர்முகமாய்
வாழ்த்துகிறோம் வாழி!
வருடங்கள் பலவாக தொகுப்பாக்கும் நின்பணிகள்
நீழ்க!
நன்றி மிக்க நன்றி