சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

மலைப்பு…
செயற்கை ஆற்றல் மிளிர்வாக
வியக்கும் விஞ்ஞானம் நிமிர்வாக
விந்தை உலகே மலைப்பாகும்
வளர்ச்சிப்பாதை எதுவாகும்
இயற்கை செயற்கை இடர்பாடு
மருத்துவம் மனித உடன்பாடு
மாறுமா வாழ்வின்
வெளிப்பாடு
இயற்கை உன்னதம் அறிவாக்கி
இயல்பு நிலையை வாழ்வாக்கி
செதுக்கல் செய்து சீராக்கும்
மலைப்பில் மலர்தல் மனிதவெற்றி!
மாற்றம் வரின் உலக வெற்றி!