சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

மார்கழியே….
ஈராறு திங்களில் ஒற்றை மலர்
ஈகையின் கொடையில் நிறையும் மலர்
மனிதத்தின் திங்கள் மலர்ந்திடுமே
குளிரின் வளமும் குதூகலமும்
கொண்டாட்ட மகிழ்வின் எழில் அழகும்
பாலன் பிறப்பின் வரவேற்பும்
பற்றாய் நிறைந்த மார்கழியே
பாரில் ஒளியே நிலைத்துயர
வாழ்வில் வளமே வானுயரும்.
மார்கழித் திங்கள் மறுபடியும்
மாற்றும் ஆண்டாய் அடிபதிக்கும்
மனிதநேயம் பூத்துயரும்.
நன்றி
மிக்க நன்றி.

உளமார வாழ்த்துக்கள் விழாக் கோலம்
மார்கழியில் மனிதநேயம்