வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

என்று தீருமோ…
நினைவுகளாய் நிரம்பி
நித்தம் அலை மோதி
நிதர்சனத்தை தேடும்
உறவுகளின் தாகம்
உருக்குலையும் தேசம்
ஏங்குகின்ற மனதே
என்றாகும் தீர்வு
எதுவாகும் வாழ்வு
காணாமல் ஏங்கும்
கண்களுக்குள் ஈரம்
கவலை நிலைத் தேக்கம்
நொந்து தினம் வாடும்
கொந்தளிப்பில் காலம்
என்றாகும் தீர்வு
எதுவாகும் வாழ்வு
உறவுகளின் உராய்வில்
உறங்காத அலையாய்
தணியாத தாகம்
தவிர்க்க ஏது வழியோ
தளராது நிமிர்வோம்
தாங்கிக் துயர் களைவோம்.
நன்றி மிக்க நன்றி