செலவின் செல்வாக்கு …
வாழ்க்கையின் அச்சாணி வரவின் செலவாளி
பணத்தின் அரிச்சுவடி பயன்களின் தொழிலாளி
நீக்கமுற எம்மோடு நீங்காத உறவாளி
செயலின் விம்பமாய் செல்வாக்கின் சிகரமாய்
வாழ்க்கை கதவுகளை வந்தே தரிசிக்கும்
நோய்க்கு மருந்து போல் சேர்ந்தே உறவாடும்
கட்டணமே காத்திடம் காரியங்கள் செயாலாகும்
வாழ்க்கைப் பொழுதிற்கும் வருமானச் செறிவிற்கும்
இடையில் ஊடுருவி இடையோடும் பயனாளி
வரியின் வடம்பிடித்து வாடகையை உடனழைத்து
வாகனமும் வரிந்திழுத்து வங்கியில் நிலைபடுத்தும்
வாழ்க்கையோ நிலநடுக்கம் வருமானம் அகன்றுவிடும்
திகதியோ தீர்பளிக்கும் தினம் போனால் உயர்ச்சி வரும்
வீட்டின் முன்னாடி வீற்றிருக்கும் விருந்தாளி
வாங்கித் தேக்கி வைக்கும் வருமானச் சேகரிப்பு
செலவின் செல்வாக்கே வாழ்வின் அச்சாணி..வற்றாத ஊற்றாகும் வருமான உழைப்பாளி.
நன்றி