மாறுகின்ற முகவரிகள்…
தொன்மை குன்றாது
தொடர்பும் விலத்தாது
பயணம் வாழ்வாகும்
பணிகள் வேறாகும்
ஆற்றல் அணிசேரும்
ஆக்கம் விளைவாகும்
உயிர்ப்பின் சுவாசத்தில்
உலகின் உராய்வுகள்
உந்து சக்தியாய்
மாற்றும் தொழில்நுட்பம்
மதியின் அறிவிலே
வேகம் சுழற்சியில்
விரையும் பெருமாற்றம்
வினைத்திறன் உந்தியாய்
அறிதிறன் விருத்தியாய்
அகிலப் புரட்சியில்
அசையுதே அனுதினம்
மாற்றத்தின் திறவுகோல்
மலைபோல் வளருது
போற்றிடும் செயல்களும்
நொடியிலே நிகழுது
வாழ்த்திடும் வாகையில்
வற்றாத வரமே
தொழில்நுட்ப அறிவியல்
துலங்கிடும் நிதமே!.
நன்றி