சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்

தலையீடு….
முறையீடு முளைவிட்டால்
தலையீடு தற்காக்கும்
தகுந்தவழி காட்டும்
தேவையற்ற தலையீடு
பயனற்ற பயன்பாடு
புலம் தந்த பாடம்
தலையீடு தவிர்த்தலும்
தகுந்தபடி வாழ்தலும்
உறவிற்கும் உகந்தது
உரிமைக்கும் தகுந்தது
வாழ்விற்கும் வளமது
காலத்தின் கரிசனை
காப்பதே முறைமை.
நன்றி