கறுப்பு யூலை…
வெறுப்பை விதைத்தது
வெந்தணலிட்டது
இனத்தின் அழிவு
இரக்கமற்ற கொலைகள்
எண்பத்தி மூன்றில்
எண்ணிலடங்கா கோரக்கொலைகள்
எங்கும் அவலம் எதிலும்
மரணம்
வெலிக்கடைச் சிறைக்குள்
வீரர்கள் மாண்டனர்
எரியும் நெருப்பில் எத்தனை உயிர்கள்
கருகிமடிந்த கறுப்பு யூலையாய்
கணக்கில் இன்று நாற்பதாண்டு
கனதி சுமந்து காயம் நிறைந்து
உயிரைக் காக்க ஊரைவிட்டகன்று
உருக்குலைந்த இனமாய் அடித்தளமிட்டது கறுப்புயூலை
கால வடுக்கள் காயம் அனலே
போரும் அனலாய் புதைந்த யூலையாய்
எழுகை நிறுத்தி எண்திசை இருளில்
எம்மினம் அழிந்து நாற்பதாண்டுகள்
கறுப்பு யூலையாய் கருகிய தினமே
வெறுப்பை எமக்குள் விதைத்த தினமே.
மிக்க நன்றி