வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

கனவுக்கதவுகள்…..
மனதில் உறைந்துள்ள மறவாத பொக்கிசம்
கனவென உருவினை மாற்றிடும் சித்திரம்
எண்ணத்தின் வனப்பினை ஏற்றமாய் தீட்டிடும்
கதவுக்குள் அடைப்பட்ட காவியப் பொக்கிசம்
உருளும் உலகினை உள்ளத்தில் புதைத்திடும்
எண்ணத்தின் கதவுகள் எரிகின்ற தீபங்கள்
ஏற்றத்தின் உளியாய் உழைக்கின்ற செதுக்கல்கள்
மீட்டலில் சிலையினை வெளிப்படலாக்கும்
மீளவும் கனவினை கதவெனத் திறக்கும்
ஆழியின் வழியில் ஆயிரம் கோடுகள்
அகத்தின் உராய்வே ஆழத்தின் உணர்வு
காலத்தின் திறப்பாய் கம்பீரம் கொண்டது
ஞாலத்தின் பரப்பில் நம்பிக்கை வளர்ப்பது
ஆசையின் உறைவிடம் ஆலயம் போன்றது
கனவின் கதவுகள் வெளிபடல் செய்வது
வெல்வோம் என்பதே வெற்றியைத் தருவது
வெளிப்படல் செய்திட கனவுகள் அவசியம்
கதவுகள் போல வாழ்வது அடித்தளம்
காலத்தின் தெளிவே கனிவுறும் வெற்றி.
நன்றி வசந்தா ஜெகதீசன்.