கலங்கரைக் கைதிகள்….
விலங்கற்ற விடியலில்
விவேகத்தின் சக்தி
விதையிட்ட நிலத்திலே
காலத்தின் யுத்தி
ஞாலத்தை ஆளுது
சமூகத்தின் சாரல்
நாளுமே அழிவுகள்
தொடர்கின்ற வேகம்
கல்வியில் சிதைவு
கலாச்சார அழிவு
போதையின் வஸ்து
புரளுது வாழ்வு
மாற்றத்தின் கதவு
மனிதத்தின் உலகு
அகப்படும் அவலங்கள்
ஆயிரமாகும்
அகங்களின் இருளே
அவலத்தை பகிரும்
கலங்கரைக் கைதியாய்
நிலங்களை சூழ்ந்த
கறைகளை களைதலே
காலத்தின் வெற்றி
கண்கெட்ட பின்னே
சூரிய நமஸ்காரம்
நானிலம் நம்முன்
நலிந்தே வீழும்
நாளைய சந்ததி
நல்வழி இன்றி
வாழ்தலை சுட்டும்
கலங்கரை கைதிகள்
நாமே நமக்கு விலங்கிடல் விதியே.!
நன்றி
மிக்க நன்றி.