அகதி நாம் பெற்ற வரமா …
நிலத்தில் பூத்தகொடி
புலமதில் புகுந்த செடி
வரமது அகதியாய் வாங்கிய கொடையா
வரட்சியில் வரண்டிடும்
நிலத்தினை போல
வாழ்வில் ஒட்டிய பெயரே அகதி
வாழ்ந்தகம் விட்டகன்று
வேற்றகம் வீழ்ந்தெழுந்து
பெற்றவை பெரும்பாடம்
பேறெனச் சுமப்பவை பேரவலம்
அகதியின் முகவரி
அடித்தளமிட்டது
அடுத்தலைமுறை
படிமுறையானது
அகதி என்னும் முத்திரை
அகற்றிட முடியா யாத்திரை
தஞ்சமென்னும் கோரிக்கை
தந்திடும் பெயரே நிரந்தரம்
அகதி என்னும் நாமமே
அடைக்கலமானது ஞாலத்தில்
அடையும் உயர்விலும் இடம்பிடித்து
நகரும் நிழல்போல் நம்மோடு.
நன்றி