வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

தலைசாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்…
காவியத்து நாற்றுக்கள்
கலங்கரையின் விளக்குகள்
இலக்கின் விழுமியங்கள்
இன்னுயிர் ஈர்ந்தவர்கள்
தவத்தின் புதல்வர்கள்
தன்னம்பிக்கை வி்த்துக்கள்
மனிதம் வாழ்ந்தொளிர
மாவீரர் கொடையானார்
ஈழம் மீட்டெடுக்க இன்னுயிர் தியாகம் செய்தார்
அகலொளித் தீபங்கள்
அறநெறி வியூகத்தில்
எண்ணற்ற மனிதமாய்
எண்திசையும் ஒளிர்கின்றோம்
வண்ணத்துப் பூச்சிகளாய்
வாழ்விலே மிளிர்கின்றோம்
கார்த்திகை வீரருக்கு காணிக்கை போதிடுமா
காலத்தில் செய்த உதவி
ஞாலத்தில் பெரிதன்றே
நாளுமே தலைசாய்ப்போம்
நன்றிக்கு வித்தாவோம்
பாரிலே தமிழினமாய்
பண்பாட்டு விழுதெறிவோம்
போரிலே பட்டதுயர் புறத்திலும்
அகத்திலும்
நேரிலே உயிரீர்ந்த உத்தமரின்
உளஉரமே
போற்றுதலும் சாத்துதலும்
தலைசாய்க்கும் தனிவீரம்.
மனிதத்தின் மாவீரம்!.
நன்றி
மிக்க நன்றி.