தவிப்பு…
ஆயிரம் கோணத்தில் தவிப்பு
அவலத்தில் துடிப்பது மனசு
காயத்தின் வலிகள் கணதி
கடந்திடும் வாழ்வோ அவதி
தாயகத் தவிப்பே மிகுதி
தணியாத தாகத்தின் நியதி
ஏதிலி வாழ்வின் தவிப்பு
எண்ணற்ற உயிர்கள் இழப்பு
நாடோடி மைந்தராய் நாங்கள்
குமுறிடும் எரிமலை குன்றில்
எரிகின்ற விடியலின் நெருப்பு
எமக்குள்ளும் ஓயாத தவிப்பே!.
நன்றி
மிக்க நன்றி