வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்…
வளம் குன்றி வரட்சி காணும்
வற்றும் நீரால் அசுத்தம் சேரும்
ஆழி நீரை கழிவே ஆளும்
அழியா நெகிழி அதிகமாகும்
பலம் குன்றும் பாரில் கழிவு
பாதிப்பில் மனித வாழ்வு
நாமே செய்யும் நாசச் செயல்கள்
நானிலத்தின் வீழ்ச்சி விதைகள்
நாளை வாழ்வு வீழ்த்தலாகும்
வருமுன் காத்தல் மதியின் நுட்பம்
காடு கழனி அழித்தல் நிறுத்தி
கடும்கொடை நிலையை விலத்தி
நெகிழிப் பயன்பாடு தவிர்த்து
புவியின் காப்பில் அரணை அமைத்தால்
இயற்கைச் சூழல் இயல்பில் ஓன்றும்
மனிதவாழ்வை மதிநுட்பம் ஆளும்!
நன்றி
மிக்க நன்றி