ஆகா! வியப்பில் விழிகள்..
வாழ்வின் தடங்கள் பதியமிட
வனப்பில் வாழ்வு உயரம் தொட
ஆற்றும் வீரியச் செயல்களிலே
அடுத்தபடியின் அடித்தளங்கள்
தொடுக்கும் சரமாய் பவ்வியங்கள்
தொன்மை துலங்கும் வரைமுறைகள்
அன்பால் நேசம் அரவணைக்கும்
அம்மா வாழ்வு அதை விளக்கும்
உண்மை அன்பில் விதையிட்டு
உறவுகள் சரிதம் புடமிட்டு
மேன்மை காட்டும் மெய்யன்பில்
மேன்மக்களாய் வாழ வழியிட்டார்
அன்னை வாழ்வின் பணிச்சுமை
அனைத்தும் நிமிர்வின் சாதனை
ஆகா! வியப்பில் விழிகள்
ஆச்சரியத்தின் குறிகள்!
நன்றி
மிக்க நன்றி