சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

தீ..
அறிவுத் தீ அனல் விளக்கு
ஆலயத் தீ அகல் விளக்கு
ஆதியில் தீ வணங்கிடும் தெய்வம்
நீதியின் தீ சாட்சியாய் உருவம்
மதுரையில் தீ கோபத்தின் கனல்
யாழ்நூலகத் தீயில் தொலைந்ததே வரலாறு
காட்டுத் தீயின் கொடூர வேகம்
கட்டுபடுத்த முடியாது உலகம்
இயற்கையின் கொடையிது
தீபமாய் ஒளிரும் திருமணச் சாட்சியாய் மிளிரும்
சூழலும் காக்கும் சுத்தமும் பேணும்
வேகமாய் எழுந்தால் வெந்தணலே!
வீறுகொண்டால் தீக்கிரையே.!
நன்றி
மிக்க நன்றி