நாதம்….
ஓசையின் ஒலிப்பு
ஓங்கார இணைப்பு
அவனியின் பிணைப்பு
அனுதின அழைப்பு
நாதமாய் இசைக்கும்
நம்மிதயத் துடிப்பே
ஓசையும் ஒலியுமாய்
ஓங்கார சுருதியாய்
ரீங்காரம் இசைக்கும்
குவலயக் குன்றிலே
நாதத்தின் லயமே
நாம் மீட்டும் வாழ்வு
வசப்படும் இசையே
வரலாற்று ஏடு!
நன்றி
மிக்க நன்றி