வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

தாமரைஇலை..
உறவாடும் உலகியலும் இதுவாகும் நடப்பு
ஒட்டியும் ஒட்டாமாலும் உறவாடும் சிறப்பு
எதிர்பார்ப்பின் முனைப்பிலே நடக்கிறது நட்பு
எதுவாகும் உறவிற்குள் விரிசலே வெறுப்பு

தூது வரும் வைபரில் எழுத்துக்களே எற்பு
தூரம் குன்றி வரும் நாளாந்த அழைப்பு
பாரமும் பாதையும் இன்றியே வாழ்வு
காரமும் சாரமும் விவாதமாய் விதைப்பு

கல்வியின் முடிச்சிலே கணனியே இணைப்பு
அறிவுசார் விருத்தியில் இல்லையே கணிப்பு
அன்றாடம் அறிதலில் முடியுதே படிப்பு
அனுபவ பட்டறிவு கிட்டாத வாழ்வு

நீரோடு உறவாடும் தாமரை இலைபோல
பெற்றோரும் பிள்ளைகளும் இதுவாகி நடிப்பு
இதுவானால் எதுவாகும் உறவிற்குள் பிடிப்பு
நகர்கின்ற நாட்பொழுது சான்றாகும் விழிப்பு.
நன்றி