வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வகுப்பறை ஆளுமைகள்..
ஆற்றல் விழுதின் அத்திவாரம்
அடித்தளமிட்ட ஆலவிருட்சம்
குழந்தைப் பருவ முதல்நிலை
கூட்டுவாழ்வில் வகுப்பறை

ஆசான் காட்டும் அன்பிலே
அக்கறை செலுத்தும் நட்பிலே
வகுப்பின் வாழ்வு முன்னேற்றம்
வருடா வருடம் வகுப்பேற்றம்

கசடற மொழியில் கல்வியாய்
கற்கும் பண்புகள் சிகரமாய்
செலுத்தும் செயலில் எத்தனை
சிலைகள் செதுக்கிய உளிகளாய்
சிரமம் தாங்கும் ஏணிகளே
உருவாக்கி உயர்த்தும் உபாத்தியார்கள்

வகுப்பறை ஆளுமை விருத்திக்கும்
வளர்முகச் செயல்களின் திறமைக்கும்
பன்முக ஆற்றலின் மிடுக்கிற்கும்
பாரில் பணிசெய்யும் பேறுபெற்றோர்
பண்பிலே வகுப்பறை ஆளுமையை
பயிற்றிடும் வள்ளல்கள் தினமாகும்

சாலவும் சிறப்பென நன்றி பகிர்
நானில நட்பிலே உயர்மகுடம்
வகுப்பறை கூடத்தின் பள்ளிக்காலம்
வாழ்விலே மறவாத பசுமைக்காலம்.
நன்றி