சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
சந்தம் சிந்தும் கவி…
மழை நீர்…
வான்தொடுகை புவிநிலத்தின் ஈர்ப்பு
வளமாகும் பயிர்ச்செடிகள் வனப்பு
உயிரினத்தின் வாழ்விற்கு உயிர்ப்பு
உலகின் கொடை மழைநீரே உழைப்பு
இல்லையேல் உயிர்வாழ்தல் அரிது.
வெள்ளமென வந்துவிடில் தாக்கம்
விளைந்தபயிர் அழிவு நிலை ஏக்கம்
உடமைகளும் ஊர்நிலமும் விரயம்
மீண்டெழவும் மீள்வரவும் மழைநீர்
வேண்டும் வரம் கோட்பாடே உலகில்
ஆக்கமும் அழிவும் தேங்கும்
அத்தியாயம் தாங்குதலே இயல்பு.
நன்றி.