சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

மாட்சிமை நிறைந்த மகாராணி….

ஆற்றல் வியூகம் அளப்பெரிதாய்
ஆளுமை விருட்சம் உலகாளவாய்
தோற்றம் பெற்ற தொடர்சரிதம்
போற்றும் தகையாய் வரலாறு
புவியில் நிலைத்த மகாராணி
காத்திடம் கம்பீரம் கரிசனைகள்
நிலைநாட்டிடும் நிதர்சனப் பொறுப்பாளி
தொடரெனும் தொன்மையை புடமிட்டு
துலங்கிடும் உலகியல் வளம் கோர்த்து
அழகியல் முகப்பாய் முத்திரைகள்
அறநெறி வாழ்வியல் வரம்புகளில்
புறநெறி புத்தொளி வளம்பாட
பூத்தே மலர்ந்த மகாராணி

பார்த்தே காத்த பலம்பெரிது
பரம்பரை உ ரத்தின் மறவழி
அகவை தொன்னூற்றாறு தடம் பதித்து
மாட்சி நிறைந்த மாகராணி
குன்றில் விளக்கென குவலயத்தில்
குடிகொண்ட ராச்சியம் மாபெரிது
வாகைகொள் தகுதியின் வரம்பெரிது.
நன்றி
மிக்க நன்றி