வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

சுடுகின்ற சுவடுகள்…
வலுவிழந்து தள்ளாடும்
வயோதிப மனிதம்
வளமாக்க உழைத்து நின்ற
வாய்ப்புக்கள் அதிகம்

தங்குநிழல் மரமாகி
குடைவிரித்த தருணம்
தாங்கி நிற்கும் உறுதியிலே
தளிர்கொடிகள் அதிகம்

படிப்படியாய் முன்னேறி
பலபடிகள் தாண்டும்
பக்குவமாய் பட்டறிவு
பலகதைகள் புனையும்

ஆன்றோராய் சான்றோராய்
அனுதினமும் நகரும்
அவரவர் வாழ்வினிலே
அத்தியாயம் பகிரும்

சுடுகின்ற சுவடுகளும்
சூழலிலே உறையும்
தத்தளிக்கும் மனிதமென
தள்ளாடும் முதுமை

வற்றிவிட்ட குளம் போல
வரண்டு போகும் நிலைமை
எத்தனையோ வரம்பமைத்து
ஏற்றி வைத்த அரணில்

பற்றிநின்று பாதுகாக்கும்
மனிதமற்ற நாதி
சுடுகின்ற சுவடுகளே
சூழல் தந்த பாடம்.
நன்றி
மிக்க நன்றி.