சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
சந்தம் சிந்தும் கவி

எண்ணம்..
அகத்தினை ஆளும்
ஆற்றலின் பிரவாகம்
வாழ்வினைச் செதுக்கும்
வரலாற்று பதிவாகும்

எண்ணத்தின் விதைப்பே
ஏற்றத்தின் விளைச்சல்
ஒளிர்கின்ற வாழ்வே
உயர்விற்கு துணிச்சல்

பண்பாட்டுச் சீரில்
பயணத்தின் பாதை
விழுமிய வேரே
விதைப்பாகும் நாளை
எண்ணத்தின் திறவுகோல்
ஏற்றத்தின் எழுதுகோல்

எண்ணத்தின் திரையே
வர்ணமாய் துலங்கும்
நாளைய மிடுக்கினில்
நம்பிக்கை பொறிக்கும்

இன்றைய எண்ணமே
இருப்பிடச் சாவி
எதிலுமே முதன்மை
பொறித்திடும் நீதி.!
நன்றி
வசந்தா ஜெகதீசன்.