நிறைமதியாய் நின்றுயர்க….
இருமன இணைவு
திருமண மகிழ்வு
எழிலென உறவு
ஏற்றமே உயர்வு
முத்தமிழ் முனைப்பு
முதலொலி கனவு
வளர்மதியாகி வாழிய வாழிய பல்லாண்டு!
தகமையில் புனைவு
தன்னம்பிக்கை செறிவு
உருவாக்க உழைப்பு
உலகாளும் நிமிர்வு
மகிழ்விலே மலர்வு
மனங்களின் இணைவு
வாழிய வாழிய பல்லாண்டு!
வண்ணமாய் மின்னும்
வாழ்விலே சொந்தம்
சேயவள் ராகவி
செல்லத்தின் பந்தம்
அறன்நிறை ஆற்றல்
அன்பிலே பரவசம்
வளர்முகமாகி வானையே முட்டும்
நிறைமதி வாழ்வில் நின்றுயர்க!
சிறைபடு அகத்தில்
சிப்பிக்குள் முத்தாய் மிகைபட நீவீர்
மிளிருதே வாழ்வு
நிறைமதி நித்திலம் வாழிய வாழியவே.!
நன்றி