வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பசி…
பசியென்னும் உணர்வை
பட்டுணரும் வேளை
விட்டகலும் அனைத்தும்
வெறுவயிற்றை நிரப்பும்
ஆகாரம் எதுவோ
அலைபாயும் மனதில்
கிட்டியது உணவு
திருட்டென்று அறிந்தும்
தேவையதை உணர்ந்தும்
தொட்டு விட்ட கரத்தின்
துயரதனை அறிந்து
தாங்கி நின்ற தகமை
காத்து நின்ற பெருமை
வறுமை நிலை அறிந்த
வள்ளலென உணர்த்தும்
மனிதத்தின் நேயம்
மறுபிறப்பு எடுக்கும்
பிள்ளையவள் முன்னே
தலை குனியா வாழ்வு
கள்ளமது செய்த உள்ளமது குறுகும்
மெல்ல இனி இந்த நிலையதுவும்
விலகும்
தருணமது அறிந்து தக்கபடி நடந்து
தயவு அது புரிந்து தராள மனசு
உதவி நிலை உயர்வே
உணரும் வகை செய்தார்
நாமும் அதை உணர்ந்து
நல்வழிகள் தொடர்வோம்.
குறும்படத்தின் தெளிவு
சுயம் காக்கும் உணர்வு.
நன்றி.
மிக்க நன்றி.