வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

சித்திரம் பேசுதடி…..
செழிப்பில் செதுக்கிய வனப்பு
செம்மையில் பசுமைக் கலப்பு
அணியென மலர்கள் அலங்கரிப்பு
அவனியே விழாக்கோல வியப்பு

கடலும் வானும் ஒன்றிக்க
கச்சிதமாய் வெப்பம் தணிந்திட
தண்ணொளி நிலவே பிரகாசம்
தரணி மயங்கும் எழில்க் காலம்

சுற்றுலாச் சுவாசம் சுதந்திரமாய்
விடுமுறை ஞாலம் விண்ணொளியாய்
எங்குமே எழிலின் விம்பங்கள்
ஆலயதரிசன ஊர்க்கோலம்
உறவுகள் சொந்தங்கள் உல்லாசம்
சித்திரமாய் பேசும் ஆவணியே
செதுக்கிய புனையா ஒவியமே.
நன்றி
மிக்க நன்றி குரலிணைவிற்கும்
தட்டிக்கொடுப்பின் ஊக்குவிப்பிற்கும்.
நன்றி.