புவியின் புரட்சி…
பருவத்தின் படர்வு
பாதைகள் நான்கு
காலத்தின் மிளிர்வே
காணிக்கை வாழ்வு
ஞாலத்தை செதுக்கும்
ஐவகை பூதம்
நாளுமே மிளிரும்
ஐவகை நிலத்தின்
ஒற்றுமை விதைப்பில்
ஓங்கும் புவியே
கற்றவை உன்னிடம்
கடலின் அளவு
பெற்றவை பேறுகொள்
வாழ்வின் நிமிர்வு
புரட்சி பதிவே பூக்கும் உலகே
உனக்கு நிகராய்
உலகே நிமிர்வு
ஐவகை பூதமும்
ஆற்றும் பகிர்வு.
நன்றி
தொடராக வடம் பற்றி
நிமிர்வாக சந்தம் சிந்தும் கவியை
நிகழ்த்தி தரும் தோழமைக்கு
மிக்க நன்றி இரு தொகுப்பாளர்களுக்கும். பாராட்டுக்கள்.
நன்றி.