வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வரலாற்றின் முகவரியே….
பெற்றோர் பேறே பெருமை பேறு
பெயராய் பொறிப்போம் நானிலத்தில்
வளமாய் வாழ வழிகாட்டும்
வள்ளல் தகமை தாங்குபவர்
உறவாய் காக்கும் உறவிவர்
உதிரம் தந்த முதலிவர்
உள்ளம் நிறைந்த பேரன்பில்
எண்ணம் உறைந்த பொக்கிசமே
இதயக்கோவில் வாழ்பவரே
சிற்பி க்குள் முத்தாய் காத்தவரே
சிறந்த வழிகாட்டியவர்
அன்பு க்குள் அடைக்கலம் ஆனோமே
அனுதினம் எமக்காய் அர்ப்பணங்கள்
நட்பாய் பழகும் நம் தந்தை
நாளும் வளர்த்த பேரன்பில்
உறுதுணை ஊன்றிய பெருவிருட்சம்
உலகினை காட்டிய முதல்சொந்தம்
உண்மை அன்புப் பொக்கிசமே
உளம் நிறைந்த தந்தையே.
வழியே தந்த விழி நீங்கள்.
நன்றி