காலத்தின் முகவரிகள்..
தற்காலக் கோடை
தணியாத வெப்பம்
பருவத்தின் மாற்றம்
பாரிற்கே வெளிச்சம்
பசுமையின் ஆட்சி
புதுமையின் தோற்றம்
பூக்களே உலகம்
காலத்தின் சுழற்சி
கடிகாரப் புரட்சி
ஞாலத்தின் தோகை
இலையுதிர் வேட்கை
கோலத்தை மாற்றும்
கோடையும் குன்றும்
கொட்டும் பனியில்
குளிரின் மிகையில்
நானில உறைவு
நசுங்குமே மனது
கை கால் விறைப்பு
காலத்தின் மிடுக்கு
இலைதுளிர் மகிழ்வில்
இருப்பிட இயல்பில்
மீளுமே அழகு
மீண்டுமாய் தெளிவு
பருவத்தின் ஏடு
படருமே வாழ்வு
பரம்பரை உராய்வில்
பருவமே முதிர்ச்சி
காலத்தின் நிழலாய்
காக்கும் முகவரி
பருவத்தின் கோடுகள்
பறைசாற்றிடும் பதிவுகள்.
நன்றி.
மிக்க நன்றி.