கோடையும் குளிர்மையும்….
இயற்கையின் இயல்பு
இல்லையேல் தவிப்பு
வெப்பத்தின் அதிர்வு
வேண்டுமே தணிப்பு
காலத்தின் கணிப்பு
கடந்திடும் அழைப்பு
எமக்குள் குமுறும்
எண்ணத்தின் செறிவு
கோடையும் குளிர்மையும்
ஊற்றென விரவும்
இருப்பதை தவிர்க்கும்
ஏக்கத்தை நிரப்பும்
இன்றெனப் புலர்வதை
நன்றென உணர்ந்து
வென்றிடும் அகமே
வேட்கை யின் இலக்கு
கோடையில் குளிரும்
குளிரிலே அனலும்
இயல்பிலே திரிபு
இரண்டறக் கலந்து
வரைந்ததே உலகு
வருவதைச் சுமந்து
வாழ்வதே அறிவு.
நன்றி.
மிக்க நன்றி.