ஒவ்வாமை
காலத்தின் கணதி
காயத்தில் அவதி
ஒவ்வாமை மிகுமே
ஓயாது அவலம்
எண்ணற்ற விதங்கள்
ஏற்காத மாற்றம்
உடலில் மட்டுமா
உறவுகள் உராய்விலும்
உலாவுமே நிதர்சனம்
அழகியல் வாழ்வை
குலைத்திடும் குளவி
ஆங்காங்கு கொட்டுமே
ஒவ்வாமை விலகின்
உலகே மெய்ப்படும்
உறுதி நிலைக்கும்.
நன்றி