பாமுகம்…
விடியலின் எத்தனம்
விவேகத்தின் திறவுகோல்
மொழியின் சாளரம்
முன்னேற்ற முழுமதி
எண்திசை யாசகம்
எங்குமே ஒளிமுகம்
அடுத்த தலைமுறை
அடித்தள வித்தகம்
எடுத்த செயல்களில்
ஏறுமுகமாய்
தொடுக்கும் சரங்கள்
தொடருமே வடமாய்
பாமுகப் பந்தல்
படருமே தினமாய்
உருவாக்க உயிர்ப்பில்
உன்னத வேள்வி
உலகையே வெல்லும்
அர்ப்பண ஆழி!
நன்றி