பழமை….
வரலாற்றுப் பழமையில்
வானொலிச் சரிதம்
அறிவூட்டும் அன்னைமொழி
அரைமணி நேரம்
தவமாக தவமிருந்து
கேட்பவர் உலகம்
எழுத்தோடு நிமிர்வான
இலண்டன் தமிழ் வானொலி பயணம்
ஆண்டுகள் தோறும்
அறுபடும் வேராய்
மீண்டுமாய் மிடுக்கோடு
பயணிக்கும் தேராய்
வாண்டுகள் சுற்றுமே
வரிசையில் பலராய்
இளையவர் உருவாக்கம்
எதிலுமே புதிதாய்
தோன்றிய பாதையில்
தொல்லைகள் மிடுக்காய்
தொடர்ந்திட்ட வலுவே
பாமுகப் பணியாய்
வெள்ளியின் விழாவாய்
வெற்றியில் மிளிரும்
பழமையில் உருவாக்கம்
புதுமையில் ஒளிரும்
புதுயுகம் ஆளுமே
பழமையின் சான்று
பட்டவை உணர்த்தும்
பாமுக வனப்பு.
நன்றி