ஏக்கம் விலத்திய ஏறுமுகம்…
எழுத்தின் வனப்பு ஏற்றமிடும்
இனத்தின் தோப்பு வளர்ச்சியுறும்
அடுத்த தலைமுறை எழுச்சி பெறும்
அயராப் பணியே அணி மகுடம்
தொடர்ச்சி காணும் வீரியத்தில்
துலங்கும் புலமை மொழியாற்றல்
விதையாய் ஊன்றிய விருட்சத்தில்
வெள்ளி விழாவின் வரவேற்பு
எழுத்தில் ஊன்றிய விதை நாற்று
எண்திசையெங்கும் ஒளிவீச்சு
பாமுகமாக வளர்ச்சியுற
பட்டிட்ட பாடுகள் பலநூறு
சுட்டிட சுட்டிட ஒளிரும் பொன்போல்
எதற்கும் அஞ்சா மனத்துணிவே
இன்றென ஒளிர்ந்திடும் வரலாறு
உருவாக்கத்தின் உளவியல் போராளி
நான்காம் தலைமுறை பெருவேள்வி
ஆக்கும் திறனுக்கு அட்சயமாய்
அணிசேரும் நேயர்கள் உறுதுணையாய்
காக்கும் கண்ணியம் பெரும்நிதியாய்
நோக்கம் இன்று விழுதாச்சே
ஏக்கம் விலத்திய ஏறுமுகம்
எண்திசை ஒளிரும் பாமுகமே.
நன்றி
மிக்க நன்றி.