சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

சாதனை….
அடையாளத் தாய்மொழி
அடைந்திருக்கும் சாதனை
உலகமொழி மூலமாய்
உதயமொழி முதலுமாய்
அகிலமெங்கும் வேரூன்றி
விழுதாகும் வெற்றி நிலை
கற்றறிந்தோர் பலருமாய்
கல்விநிலை விருதுமாய்
பேறுபெற்ற பொக்கிசமே
இயலிசை நாடகத்தில்
இணைந்திருக்கும் தத்துவமே
சாதனைப் பேரேடே
சங்ககால வரலாறே
சாதித்தோர் முன்னிலையில்
சான்றுகள் ஏராளம்
புலமைகளும் புதுமைகளும்
புரட்சியின் புதுவேகம்.
நன்றி
மிக்க நன்றி