வரலாற்றில்…
விரக்தி வாழ்வை புறந்தள்ளி
விடியும் வாழ்வை உரமாக்கி
துணிவை விதைப்போம் உரமாகி
தூரம் விலத்து தொடர்பிலே
பாரம் விலகும் அன்பிலே
பாதை செப்பும் அகத்திலே
நாளைய உறுதி நமக்குள்ளே
நானிலம் காக்கும் திடத்திலே
கடந்தவை மறத்தல் தகமையே
காக்கும் கரத்தில் வலிமையே
ஞாலம் நிலைக்கும் ஒற்றுமை
நலிந்த குன்றும் வேற்றுமை
திரண்டே எழுவோம் இனமாகி
திரும்பிய பாதை வலிபோக்கி
புதியவை பூக்கட்டும் ஈழத்தில்
புதுசாசனம் எழுதும் வரலாற்றில்.!
மிக்க நன்றி.
கவிகளை செப்பனிட்டு காத்திடப்படைப்பின் வலுப்படுத்தலுக்கு மிகையான நன்றிகள்.